12 கிலோ உடல் எடையை குறைத்த ரேஷ்மா பசுபுலேட்டி
ADDED : 306 days ago
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. அந்த படத்தில் இவர் நடித்த புஷ்பா என்ற கதாபாத்திரம் இவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அதன் பிறகும் பல படங்களில் நடித்த ரேஷ்மா, சின்னத்திரையிலும் பாக்கியலட்சுமி, தீபம் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். உடல் எடை அதிகரித்து காணப்பட்ட ரேஷ்மா, தற்போது 12 கிலோ குறைத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில், சில பிரச்னைகள் காரணமாக எனது உடல் எடை அதிகரித்துவிட்டது. அதனால் கடந்த 9 மாதங்களாக உணவு கட்டுப்பாடு மற்றும் ஜிம்மில் தீவிரமான ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு தற்போது 12 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரேஷ்மா.