ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக மிருணாள் தாகூர்
ADDED : 308 days ago
ஷானில் டியோ இயக்கத்தில் ஆத்வி சேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டகோயிட்' . இதில் கதாநாயகியாக முதலில் ஸ்ருதிஹாசனை வைத்து முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதாக தகவல் பரவியது.
தற்போது மிருணாள் தாக்கூர் இந்த படத்தில் கதாநாயகியாக இணைந்ததாக புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மிருணாள் தாக்கூர் பிஸியாக தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். ஆக் ஷன் கலந்த திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக்கி வருகின்றனர்.