இயக்குனர் அவதாரம் எடுக்கும் கலை இயக்குனர்!
ADDED : 309 days ago
2.0, இந்தியன் 2, பிகில், ஜவான், மெர்சல் உள்ளிட்ட பல மிகப்பெரிய பொருட்செலவில் உருவான படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் முத்துராஜ்.
தற்போது கலை இயக்குனர் பணியில் இடைவெளி விட்டிருந்த அவருக்கு திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் உருவாகியுள்ளது. முத்துராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குழந்தைகளை மையப்படுத்தி உருவாகும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.