உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 7 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல படம் கிடைத்துள்ளது : 'திரு.மாணிக்கம்' விழாவில் சமுத்திரகனி பேச்சு

7 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல படம் கிடைத்துள்ளது : 'திரு.மாணிக்கம்' விழாவில் சமுத்திரகனி பேச்சு

ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கி உள்ள படம் 'திரு.மாணிக்கம்'. சமுத்திரகனி டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். முக்கியமான கதாப்பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் நடித்துள்ளனர். இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு. உள்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார், சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 27ம் தேதி வெளிவருகிறது.

படத்தின் அறிமுக நிகழ்வில் சமுத்திரகனி பேசியதாவது: தனித்தனியாக எல்லாம் படத்திற்காக உழைப்பதில்லை, எல்லா படத்திற்கும் ஒரே உழைப்பு தான். எல்லோரும் வெற்றிக்காகத் தான் உழைக்கிறோம். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போல் நாம் கண்ட வெற்றியைத் தாண்டத் தான் உழைக்கிறோம். 'அப்பா'வுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து இந்தப்படம் கிடைத்துள்ளது.

இந்தப்படத்தில் நல்ல மனதுக்காரர்கள் இணைந்தார்கள். சில படங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தானாக அமையும். நந்தா கதை சொன்ன போது அய்யா பாரதிராஜாவிடம் போய் சொல்லி அவர் ஓகே சொன்னால் ஆரம்பித்து விடலாம் என்றேன். அவர் கதை கேட்டு உடனே ஓகே சொன்னார், அப்புறம் ஒவ்வொருத்தராக வந்தார்கள்.

உண்மை தான் நேர்மை. நேர்மை என்பது தான் இயல்பு. முன்பெல்லாம் கெட்டவனிடம் சேராதே வம்புல இழுத்து விட்டுவிடுவார்கள். இப்போது நல்லவனைப் பார்த்து அப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். கதை படித்தவுடன் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அனன்யா நான் கண்டுபிடித்த பெண் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அம்மா வடிவுக்கரசி அசத்தியிருக்கிறார். அப்பா பாரதிராஜா என்னைப் பார்த்து 'பண்பட்ட நடிகனாகிட்டே' என்று பாராட்டினார். அவரோடு பணிபுரிந்த ஐந்து நாள் வரம். குழந்தைகள் மிக நன்றாக நடித்துள்ளனர். இப்படம் கண்டிப்பாக வெல்ல வேண்டும். திரு.மாணிக்கம் களத்தில் நிற்கும் வெகுஜனத்தை கவரும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !