ஜெய் நடிக்கும் ‛பேபி அண்ட் பேபி'
ADDED : 325 days ago
நடிகர் ஜெய் நடிப்பில் கடந்தாண்டு ‛அன்னபூரணி' படம் வெளியானது. இதில் நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்தார். தற்போது பிரதாப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரக்யா நக்ரா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், யோகி பாபு, நிழல்கள் ரவி, ஸ்ரீமன், ஆனந்த் ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இப்போது படத்திற்கு ‛பேபி அண்ட் பேபி' என பெயரிட்டு முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார். குடும்ப சென்ட்டிமென்ட் கலந்த நகைச்சுவை படமாக தயாராகி வருகிறது. படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் ரிலீஸாக உள்ளது.