உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகா பார்த்து வியந்த விஜய் - த்ரிஷா

ராஷ்மிகா பார்த்து வியந்த விஜய் - த்ரிஷா

தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப் பிரதேச நகரமான கூர்க் தான் அவரது சொந்த ஊர். இருந்தாலும் அவரது சிறு வயதில் சென்னையிலும் வசித்திருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் முதன் முதலில் பார்த்த படம் 'கில்லி' என்றும் அது பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார். “கில்லி' படம் தான் நான் தியேட்டர்ல முதன் முதலில் பார்த்த படம். தியேட்டர்ல நான் பார்த்த முதல் ஹீரோ தளபதி விஜய் தான். அந்தப் படத்துல 'அப்படி போடு அப்படி போடு' பாட்டு இருக்குல்ல, என்னோட வாழ்க்கைல மெஜாரிட்டி நேரம் அந்தப் பாட்டுக்கு நடனமாடியிருக்கேன். எங்க அப்பா ரஜினிகாந்த் படங்கள் நிறைய பார்ப்பாரு. ஆனா, எனக்கு விஜய், த்ரிஷா அவங்களைத்தான் தியேட்டர்ல முதல்ல பார்த்தேன்,” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ராஷ்மிகா குழந்தையாக இருந்தபோது பார்த்து வியந்த விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் ஜோடியாக நடித்துவிட்டார். அப்போது கதாநாயகியாக நடித்த த்ரிஷா, ராஷ்மிகா வளர்ந்து கதாநாயகி ஆன பின்னும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !