சந்தியாராகம் தொடரிலிருந்து வெளியேறிய சுர்ஜித்
ADDED : 295 days ago
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் சந்தியாராகம். கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடரில் சந்தியா ஜகர்லாமுடி, அந்தாரா சுவர்ணக்கார், புவனா லஸியா, சுர்ஜித் என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 300 எபிசோடுகளை தாண்டியுள்ள இந்த தொடரிலிருந்து சுர்ஜித் தற்போது விலகியுள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அவர் விலகியதற்கான காரணத்தை அந்த பதிவில் குறிப்பிடவில்லை. தனக்கு வாய்ப்பளித்த சீரியல் குழுவினருக்கும், ஆதரவளித்த ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.