உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு இங்கிலாந்தின் உயரிய பட்டம்

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு இங்கிலாந்தின் உயரிய பட்டம்

இந்தியாவில் 'பாரத ரத்னா' போன்று இங்கிலாந்தில் வழங்கப்படும் மிக உயரிய பட்டம் 'சர்'. பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தால் இந்த பட்டம் வழங்கப்படுகிறது. தற்போது இந்த விருது ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கும், அவரது மனைவியும் தயாரிப்பாளருமான எம்மா தாமசுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த விழாவில் 'சர்' பட்டத்தை கிறிஸ்டோபர் நோலனும் அவரது மனைவியும் பெற்றுக்கொண்டனர்.

கிறிஸ்டோபர் நோலன் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களான பேட்மேன் பிகின்ஸ், இன்செப்சன், தி டார்க் நைட், இன்டர் ஸ்டெல்லர், டெனட் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடைசியாக வந்த 'ஓப்பன் ஹெய்மர்' படம் 7 ஆஸ்கர் விருதுகளை பெற்று சாதனை படைத்தது . தற்போது தனது 13வது படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கி வருகிறார்.

கிறிஸ்டோபர் நோலனின் பல படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தவர் அவரது மனைவி எம்மா தாமஸ். நாடகம் மற்றும் சினிமா நடிகை, திரைப்பட எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர், ஆஸ்கர் விருது உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகளை பெற்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !