ஹீரோவின் தலையீட்டால் படத்திலிருந்தே வெளியேறிய ஸ்ருதிஹாசன்
ADDED : 283 days ago
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அதோடு தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் 'டகோயிட்' என்ற படத்திலும் ஆத்வி சேஷ் உடன் இணைந்து நடித்து வந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் திடீரென்று விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக மிருணாள் தாக்கூர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் 'டகோயிட்' படத்தின் கதையில் ஹீரோவின் தலையீடு அதிகமாக இருந்ததால்தான் ஸ்ருதிஹாசன் அப்படத்தில் இருந்து அவர் விலகியதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஷானில் டியோ என்பவர் இயக்கி வருகிறார்.