குபேரா படத்தின் கதைக்களம் வெளியானது
ADDED : 308 days ago
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவரது 51வது படமாக 'குபேரா' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் படக்குழு உள்ள நிலையில் தற்போது குபேரா படத்தின் கதைக்களம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, பணத்தைப் பின் தொடர்வதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சுற்றியே கதை நகர்கிறதாம். ஒரு பிச்சைக்காரர் ஒரு வியக்கத்தக்க மாற்றத்தை சந்திக்கிறார். கதாபாத்திரங்களால் எதிர்கொள்ளப்படும் பேராசை, லட்சியம் மற்றும் தார்மிக சங்கடங்கள் ஆகியவை மூலம் மீட்புக்கான தேடலுக்கு வழிவகுக்கிறது” என செய்தி வெளியாகியுள்ளது.