உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் வெளிவருகிறது 'தாம் தூம்'

மீண்டும் வெளிவருகிறது 'தாம் தூம்'

2008ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான படம் 'தாம் தூம்'. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கங்கனா ரணாவத் நடித்திருந்தார். மேலும், ராய் லட்சுமி, ஜெயராம், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் கலந்த படம், இப்படத்தை மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கி இருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.

ஐங்கரன் நிறுவனம் தயாரித்த இந்த படம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாக இருக்கிறது. டிஜிட்டல் தரம் உயர்வு, நவீன ஆடியோ மேம்பாடு ஆகியவற்றுடன் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்கில் ஜனவரி 3ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !