உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுந்தர பாண்டியன் இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி

சுந்தர பாண்டியன் இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி

சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரபாகரன். அதன்பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்த இது கதிர்வேலன் காதல், கொம்பு வெச்ச சிங்கமடா, சத்ரியன் உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்வியை தழுவின. இந்த நிலையில் பிரபாகரன் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதனை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுந்தர பாண்டியன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !