மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
277 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
277 days ago
பாலா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'வணங்கான்'. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போதைய சூழலில் படம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது.
பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் வெளியாக உள்ளது. அப்படத்தை மிக அதிகமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். தியேட்டர்காரர்கள் தரப்பிலும் அதற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாம். மேலும், ஷங்கர் இயக்கியுள்ள 'கேம் சேஞ்சர்' படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வரும் படம் என்றாலும் ஷங்கர் படம், சில தமிழ் நடிகர்கள் நடித்துள்ளார்கள் என்பதால் இதற்கும் தியேட்டர்காரர்கள் ஆதரவு இருக்கிறதாம்.
இதனால், 'வணங்கான்' படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, வேறொரு நாளில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். ஏற்கெனவே இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். பின்னர் 2025 பொங்கலுக்கு மாற்றினார்கள். இப்போது மீண்டும் வெளியீடு தள்ளிப் போகும் என தெரிகிறது.
277 days ago
277 days ago