குட் பேட் அக்லி படத்தின் டப்பிங் பணியில் அஜித்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் அஜித் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அஜித் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றதாக அறிவித்து இருந்தனர். தற்போது குட் பேட் அக்லி படத்தில் தனக்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார் அஜித். இதுபற்றிய தகவலை ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார். அதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே குட் பேட் அக்லி படம் தொடர்பான பணிகள் மற்றும் டப்பிங் தொடர்பாக அஜித், ஆதிக் இருவரும் தனி விமானத்தில் பயணித்தபடி விவாதித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வலைதளங்களில் வைரலானது.
இந்தாண்டு (2024) அஜித் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. மாறாக 2025ல் அஜித்தின் ‛விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளன. இந்த படங்களுக்கு பின் அஜித் முழுக்க முழுக்க கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளார். விரைவில் நடைபெறள்ள கார் ரேஸில் அஜித் மற்றும் அவரது அணியினர் களமிறங்க உள்ளனர்.