உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காளிதாஸ் 2ம் பாகத்தில் பவானி ஸ்ரீ

காளிதாஸ் 2ம் பாகத்தில் பவானி ஸ்ரீ

கடந்த 2019ம் ஆண்டில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், அன் சீத்தல் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'காளிதாஸ்' . ஆக் ஷன், திரில்லர் படமாக வந்தது. போலீஸ் அதிகாரியாக பரத் நடித்திருந்தார். இந்த படத்தின் வரவேற்புக்குப் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இதே கூட்டணியில் காளிதாஸ் 2ம் பாகம் உருவாகிறது என அறிவித்தனர்.

போலீசாகவே பரத் இதிலும் தொடருகிறார். தற்போது இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் தங்கை மற்றும் நடிகை பவானி இணைந்துள்ளார். இவரும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுபற்றிய தகவலை பவானி ஸ்ரீ, சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் விடுதலை படத்தில் நடித்தது மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !