தெலுங்கு படத்தில் கிளாமர் பாடலுக்கு நடனமாடிய விஜய் பட நடிகை
ADDED : 308 days ago
நடிகை ரெபா மோனிகா ஜான் தமிழில் ஜருகண்டி, பிகில், எப்.ஐ.ஆர் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரெபா. தவிர தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரெபா மோனிகா ஜான் தெலுங்கில் கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ' மேட் ஸ்கொயர்' என்கிற படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு மிகவும் கிளாமராக நடனமாடியுள்ளார். இந்த பாடல் 'ஸ்வாதி ரெட்டி' எனும் பெயரில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.