மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
275 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
275 days ago
பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ள மலையாள படம் 'ஒறும்பேட்டவன் ' இந்தப் படம் 'துணிந்தவன்' என்ற பெயரில் வருகிற மூன்றாம் தேதி தமிழிலும் வெளியாகிறது.
இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி - ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். உன்னி நம்பியார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் இந்திரன், ஜாபர், ஜோனி ஆண்டனி, ஐ.என்.விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ், நடித்துள்ளனர். கதையின் பிரதான பாத்திரமான 10 வயது சிறுமியாக தயாரிப்பாளரின் மகள் காஷ்மீரா நடித்துள்ளார்.
பற்றி இயக்குநர் சுஜீஷ் கூறும்போது, அந்த பத்து வயதுக் குழந்தையை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். எப்போதும் துறுதுறு என்றும், சுறுசுறுப்பாகவும் ஆற்றலின் வடிவமாக அந்தச் சிறுமி காணப்படுவாள். வயது பத்து தான் என்றாலும் இருபது வயதுக்குடைய முதிர்ச்சியோடு பேசுவாள், மனிதர்களைப் புரிந்து கொள்வாள். யாருடைய தோற்றத்தைப் பார்த்தும் அவர்களுடைய குணத்தைக் கண்டுபிடித்து விடுவாள். ஒருவருடைய முக அசைவைப் பார்த்தே அவர்களது மனத்தைக் கணித்து விடுவாள்.
குடித்துவிட்டு வருபவரையும் கண்டுபிடித்து விட்டு திட்டுவாள். அம்மா, அப்பா, அந்தக் குழந்தை என்று இருக்கும் அந்த பாசக் குடும்பத்தில் காலத்தின் கோலத்தால் ஒரு புயல் அடிக்கிறது. பல சிக்கலில் இருந்து குழந்தை மீண்டு வந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. எல்லா மொழிகளுக்கும் பொருத்தமான கதை என்பதால் இதனை தமிழில் வெளியிடுகிறோம் என்றார்.
275 days ago
275 days ago