பரோஸ் : பணத்துக்காக அல்ல... என் மக்களுக்காக... - மோகன்லால்
ADDED : 323 days ago
மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான மோகன்லால் முதல் முறையாக 'பரோஸ்' என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கி, நடித்து உள்ளார். 3டி படமாக வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் பரோஸ் படம் வெளிவந்த பிறகு மோகன்லால் அளித்த பேட்டி ஒன்றில், பரோஸ் படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை நோக்கி நகர்கிறது. 47 ஆண்டுகளாக மக்கள் எனக்கு தருகின்ற அன்புக்காகவும், மரியாதைக்காகவும் அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். பரோஸ் நான் அவர்களுக்கு தந்த பரிசு. இதை நான் பணத்துக்காக செய்யவில்லை. இப்படத்தை குடும்பம், குழந்தைகளுடன் கண்டுகளிக்க நான் உருவாக்கினேன் என தெரிவித்துள்ளார்.