உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிருஷ்ணராக நிச்சயம் மகேஷ்பாபு தான் நடிப்பார் : கல்கி இயக்குனர் தகவல்

கிருஷ்ணராக நிச்சயம் மகேஷ்பாபு தான் நடிப்பார் : கல்கி இயக்குனர் தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2989 ஏடி முதல் பாகம் வெளியானது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட சிலர் சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தார்கள். வரலாற்று பின்னணியில் பேண்டஸி படமாக உருவான இந்த படம் வெளியாவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியான பிறகு அதில் பாதி அளவிற்கு தான் அந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. அதேசமயம் வசூல் ரீதியாக ஆயிரம் கோடி வசூலித்தது.

இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் கிருஷ்ணர் கதாபாத்திரம் இடம்பெற இருக்கிறது என்றும், அதில் கிருஷ்ணராக மகேஷ்பாபு நடிக்கப் போகிறார் என்றும், சமீபநாட்களாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியது.

இதைத் தொடர்ந்து கல்கி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் கூறும்போது, “கல்கி இரண்டாம் பாகத்தில் நிச்சயமாக கிருஷ்ணர் கதாபாத்திரம் இல்லாமல் தான் உருவாக்கி வருகிறோம். அதேசமயம் கிருஷ்ணரை பற்றிய ஒரு முழு நீள திரைப்படம் எடுக்க வேண்டி நாளை ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதில் மகேஷ்பாபு தான் நடிப்பார். கிருஷ்ணருக்கு அவர்தான் பொருத்தமானவர். அப்படி அவர் நடிக்கும் போது அந்த படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !