அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!
ADDED : 293 days ago
பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகன் ஜூனைத் கான் தற்போது 'லவ் டுடே' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'லவ்யப்பா' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அமீர்கான் தயாரிப்பில் ஜூனைத் கான் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சுனில் பான்டே இயக்குகிறார். சாய் பல்லவி ஏற்கனவே ஹிந்தியில் உருவாகி வரும் 'ராமாயணம்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.