அஜித்தை தேடி சென்ற சிம்பு பட கதை!
ADDED : 294 days ago
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தேசிங்கு பெரியசாமி ரஜினியுடன் ஒரு பிரமாண்டமான கதையை படமாக்க இருந்தார். அதன் பட்ஜெட் காரணமாக ரஜினி அந்த படத்தில் நடிக்கவில்லை.
அதன் பின்னர் அந்த கதையில் பட்ஜெட் குறைத்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு ராஜ்கமல் நிறுவனமும் வெளியேற வேறு தயாரிப்பாளர்களுக்கான தேடலில் சிம்பு ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இந்த கதையை நடிகர் அஜித் குமாரை சந்தித்து தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார். இதன் பேச்சுவார்த்தை முதற்கட்ட அளவில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.