பென்ஸ் படத்தில் இடம்பெறும் 8 பாடல்கள்
ADDED : 275 days ago
பிரபல பின்னனி பாடகர் திப்புவின் மகன் சாய் அபியன்கர் கடந்த ஆண்டில் இசையமைத்து, பாடி மற்றும் நடனமாடி வெளிவந்த 'கட்சி சேர, ஆச கூட' ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமாகி தற்போது தமிழில் 'பென்ஸ்' மற்றும் 'சூர்யா 45' என இரு படங்களுக்கும் இசையமைக்கிறார்.
இதில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் 'பென்ஸ்' எனும் படத்திற்கு சாய் அபியன்கர் மொத்தமாக 8 பாடல்களை இசையமைத்துள்ளார். இதில் 5 பாடல்கள் தமிழில், 3 பாடல்கள் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது என சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.