உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் சினிமா வாழ்க்கையில் இதுவே முதல் முறை - மீனாட்சி சவுத்ரி

என் சினிமா வாழ்க்கையில் இதுவே முதல் முறை - மீனாட்சி சவுத்ரி

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன், தி கோட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இவர் நடித்த தி கோட் , லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து ' சங்கராந்திகி வஸ்துனம்' எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது, இந்த படத்தின் மூலம் நான் முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன். இதில் நான் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை என இரு விதமாகவும் நடித்துள்ளேன். இதுவரை நான் இந்த மாதிரி கதாபாத்திரம் ஏற்று நடித்தது இல்லை. இதுவே முதல்முறை என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !