மகனுடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்!
ADDED : 291 days ago
கடந்த 2023ம் ஆண்டு தேசாய் என்பவரை மறுமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால். அதையடுத்து கடந்த ஆண்டில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார் அமலா பால். மேலும் தங்களது திருமணத்திற்கு பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் வரை தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த அமலா பால், தனது மகன் பிறந்த பிறகு அவனுடன் எடுத்துக் கொண்டு புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது தனது மகனுக்கு வேஷ்டி சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படங்களை இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமலாபால். அந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.