உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்திய சினிமா வரலாற்றில் 'புஷ்பா 2' புதிய சாதனை

இந்திய சினிமா வரலாற்றில் 'புஷ்பா 2' புதிய சாதனை


அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த 'புஷ்பா 2' படம் வெளிவந்து இன்றுடன் 32 நாட்கள் ஆகிறது. அதற்குள் பல வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது புஷ்பா 2. ஹிந்தி திரையுலகில் அதிகம் வசூல் செய்த படமாக உருவாகியுள்ள இப்படம், ஹிந்தியில் மட்டும் 800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் 32 நாளில் ரூ.1831 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், இந்திய சினிமாவில் உலகளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளதாகவும் புஷ்பா 2 படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், 2016ல் ஆமீர்கான் நடித்த 'தங்கல்' படம் உலகளவில் ரூ.2000 கோடி வசூலித்திருப்பதாக அப்போதே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !