மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
266 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
266 days ago
விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள அஜித் குமார், இந்த இரண்டு படங்களிலும் தனக்கான டப்பிங்கை பேசி முடித்து விட்டார். இந்த நிலையில், பொங்கலுக்கு திரைக்கு வர இருந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், குட் பேட் அக்லி படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படியான நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை குடும்பத்துடன் வெளிநாட்டில் கொண்டாடிய அஜித், கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக துபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவரை அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன், மகள் ஆகியோர் வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போது எமோஷனலாக காணப்பட்ட அஜித், மனைவி, பிள்ளைகளை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்திவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். அது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை போலவே கார் பந்தயத்திலும் அஜித் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
266 days ago
266 days ago