மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
267 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
267 days ago
அமரன் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதைத்தொடர்ந்து சுதா கெங்கரா, சிபி சக்ரவர்த்தி இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஒரு பேட்டியில், விரைவில் ஹிந்தி சினிமாவில் தான் அறிமுகமாக போவதாக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பாலிவுட் நடிகர் அமீர்கான் என்னை அழைத்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்குமாறு கூறியிருந்தார் . அது குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால் அப்போது அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. என்றாலும் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்ததும் அமீர்கான் தயாரிக்கும் படத்தில் நடிக்கப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில், தமிழ் சினிமாயில் இருந்து தனுஷ் அவ்வப்போது ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகிறார்.
267 days ago
267 days ago