மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
266 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
266 days ago
திருவாரூரை தலைநகராக கொண்டு ஆண்ட மனுநீதி சோழன் என்றாலே அவரது மகன் தேர் சக்கரத்தில் சிக்கி ஒரு பசுங்கன்று இறந்ததும், தாய் பசு ஆராய்ச்சி மணி அடிக்க, இதை கேள்விப்பட்ட மன்னன் தனது மகனை தன் தேர் சக்கரத்தால் ஏற்றி கொன்றதும்தான் கதையாக விரியும். ஆனால் இந்த கதையில் லாஜிக்கும் இல்லை, உண்மையும் இல்லை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு. இதனால் 1942ம் ஆண்டில் வெளிவந்த 'ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதி சோழன்' படத்தில் இந்த தேர்சக்கர கதையை அடக்கி வாசித்து விட்டு மன்னரின் காதல் கதையை சொன்ன படம்.
மனுநீதி சோழனின் மகன் தந்தையின் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரின் மகளை காதலிக்கிறான். ஆனால் பொறுப்பற்ற இளவரசனுக்கு தன் மகளை மணமுடித்து கொடுக்க அமைச்சர் மறுக்கிறார், பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் முக்கிய கதை.
இந்த படத்தில் மனுநீதி சோழனாக பி.பி.ரங்காச்சாரியும், அவரது மகனாக எஸ்.பாலச்சந்திரனும், அமைச்சராக சி.பி.விசுநாதனும், அமைச்சர் மகளாக எம்.ஆர்.சந்தானலட்சுமியும் நடித்தனர். பி.கே.ராஜா சாண்டோ இயக்கினார். ஸ்ரீனிவாச ராவ் ஷிண்டே இசை அமைத்திருந்தார். படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. கோவை கந்தன் கம்பெனி தயாரித்திருந்தது. வெளியீட்டுக்குப் பிறகு நல்ல வரவேற்பை பெற்றது.
266 days ago
266 days ago