சூர்யா 45வது படத்தில் இணைந்த மற்றுமொரு மலையாள பிரபலம்
ADDED : 313 days ago
ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயன்கர் இசையமைக்கின்றார். கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், சிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தில் பல மலையாள பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் மற்றுமொரு மலையாள நடிகர் அஜூ வர்கிஸ் இணைந்ததாக கூறப்படுகிறது. இவர் மலையாளத்தில் வருஷங்களுக்கு சேஷம், ஹோம், மின்னல் முரளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.