மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
264 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
264 days ago
மலையாள சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகை மாலா பார்வதி. தமிழில் இது என்ன மாயம், நிமிர், மாறா, எப்.ஐ.ஆர், அன்ன பூரணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச வீடியோ தயாரித்து வெளியிட்டு வருவதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் மாலா பார்வதி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
என்னைப்பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்கள் பதிவிடுகின்றனர். யுடியூப்பிலும் நான் நடித்த படங்களில் இருந்து புகைப்படங்களை எடிட் செய்து மோசமாக பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாருடன் அந்த ஆபாச வீடியோக்களையும் ஆதாரமாக போலீஸிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
264 days ago
264 days ago