அஞ்சலிக்கு இந்த வருடம் இரட்டைப் பொங்கல்
ADDED : 294 days ago
தமிழில் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் அஞ்சலி. கடந்த சில வருடங்களாகவே தமிழில் அதிகப் படங்களில் அவர் நடிக்கவில்லை. ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்த வருடப் பொங்கல் அவருக்கு இரட்டைப் பொங்கலாக அமைகிறது. தெலுங்கில் ராம் சரண் ஜோடியாக அவர் நடித்த 'கேம் சேஞ்ஜர்' படம் நேற்று வெளியானது. அந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியான கியாரா அத்வானியை விடவும் அஞ்சலிக்கு பாராட்டுக்கள் அதிகமாகக் கிடைத்து வருகிறது.
தெலுங்கில் அந்தப் படம் என்றால் தமிழில் நாளை 'மத கஜ ராஜா' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அஞ்சலியும் கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு மொழிகளில் படங்கள் வருவதால் அஞ்சலி மகிழ்ச்சியாக உள்ளார்.
அடுத்து தமிழில் அவர் நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படம் வெளியாக உள்ளது.