மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
264 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
264 days ago
சினிமா படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. பல கோடி முதலீடு செய்து படம் எடுப்பவர்கள் அதை ரிலீஸ் செய்வதற்குள் படாத பாடுகிறார்கள். முன்பெல்லாம் பட வெளியீட்டிற்கு தியேட்டர்கள் கிடைப்பது தான் முதல் பிரச்னையாக இருக்கும். இன்றைக்கும் அந்த பிரச்னை இருந்தாலும் அதைவிட அவர்கள் பெரும் பிரச்னையை சந்திக்கிறார்கள்.
முன்பெல்லாம் படம் வெளியாகும் முன்பு கோயிலுக்கு சென்று, படம் வெற்றி பெற வேண்டும் என தயாரிப்பாளர்கள் வேண்டுவார்கள். ஆனால் இன்றைக்கு பல தயாரிப்பாளர்கள் கோர்ட்டிற்கு சென்றுவிட்டு தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் நிதி பிரச்னை, பழைய பாக்கி வசூல், நிலுவை கடன், வட்டி பாக்கி போன்ற பிரச்னைகளால் கடைசி நிமிடம் வரை படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என காத்திருக்க வேண்டி இருக்கிறது.
நேற்று வணங்கான் படம் கூட இந்த பிரச்னையில் சிக்கி கொண்டது. பைனான்ஸ் வாங்கியதில் தயாரிப்பாளர் பாக்கி வைத்து இருந்ததால் கேடிஎம் லாக் ஆனது. அதனால் படம் காலையில் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தயாரிப்பாளர் அதை சரிக்கட்டி படத்தை வெளியிட்டார். இதேப்போல் கேம் சேஞ்ஜர் படமும் தமிழக வெளியீட்டில் பிரச்னையை சந்தித்தது. பின்னர் கடைசிநேரத்தில் சரி செய்யப்பட்டு ரிலீஸானது. இதேப்போல் நான்கு பட தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட கோர்ட் படியேறி உள்ளனர். இதேப்போல் படை தலைவன் படமும் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போய் உள்ளது.
264 days ago
264 days ago