மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
264 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
264 days ago
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்து நேற்று பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். ஷங்கரின் முதல் படமான 'ஜென்டில்மேன்' படம் முதல் அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களிலிருந்தே ஒரு கதையை உருவாக்கி இந்த 'கேம் சேஞ்ஜர்' படத்திற்குக் கதையைக் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ் என்றுதான் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் கதை எழுதிய படத்தைத் தானே புகழ்ந்து பதிவிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். “கேம் சேஞ்ஜர்' ஷங்கர் சாரின் 'வின்டேஜ்' பிரம்மாண்ட மாஸ் ஆக்ஷன் மற்றும் அரசியல் வசனங்களுடன் சூப்பர் என்டர்டெயின்மென்ட்டாக உள்ளது. ராம் சரண் சார், எஸ்ஜே சூர்யா சார் ஆகியோரது நடிப்பு பிரமாதம். ஒளிப்பதிவாளர் திரு விஷுவல் ட்ரீட் தந்துள்ளார். இந்த பெரிய பார்வையில் என்னையும் ஒரு சிறு பகுதியாக என்னை சேர்த்துக் கொண்டதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
264 days ago
264 days ago