உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மிஷ்கின் சம்பளத்தை கேட்டு ஓடிய பாண்டிராஜ்

மிஷ்கின் சம்பளத்தை கேட்டு ஓடிய பாண்டிராஜ்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் 'காதலிக்க நேரமில்லை' . இப்படம் வருகின்ற ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி நித்யா மேனன் அளித்த பேட்டியில் இயக்குனர் மிஷ்கினும் கலந்து கொண்டார்.

அப்போது மிஷ்கின் கூறியதாவது, இயக்குனர் பாண்டிராஜ் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருடனும் இணைந்து நடிக்கும் ஒரு வாய்பை எனக்கு கொண்டு வந்தார். 45 நாட்கள் கால்ஷீட் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். எனக்கு 5 கோடி சம்பள தொகையாக கேட்டேன். பாண்டியராஜ் ஓடிவிட்டார். அதன் பிறகு வரவில்லை. ஆனால், அது ஒரு நல்ல கதாபாத்திரம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !