உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜிம்மில் ராஷ்மிகா காயம் : படப்பிடிப்பு தள்ளிவைப்பு

ஜிம்மில் ராஷ்மிகா காயம் : படப்பிடிப்பு தள்ளிவைப்பு

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் மிகப்பெரிய வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் தொடர்ந்து படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வரும் ராஷ்மிகா ரெகுலராக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது ஜிம்மில் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட ராஷ்மிகவை மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் மீண்டும் எப்போது படப்பிடிப்புக்கு திரும்பவேன் என ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !