மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
262 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
262 days ago
கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் கடுமையான காட்டுத்தீ திடீரென பரவியது. இதில் பல உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்தை நேரில் இருந்து பார்த்ததுடன் அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியும் உள்ளார் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் பாலிவுட்டில் மட்டுமே அதிக அளவில் படங்கள் நடித்திருந்தாலும் மணிரத்தனத்தின் 'உயிரே' போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்தான். சமீபத்தில் இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று இருந்த போது தான் காட்டுத்தீ பரவலை நேரில் பார்த்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நாங்கள் இருந்த பகுதிக்கு மிக அருகில்தான் காட்டுத்தீ மளமள என பரவியபோது, நாளை என்கிற ஒரு நாளை மீண்டும் பார்ப்பேனா என்று என் மனதிற்குள் அச்சம் தோன்றியது. நண்பர்களும் அருகில் இருந்த குடும்பத்தினரும் சாம்பலின் தாக்கம், புகை ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக அங்குமிங்கும் ஓடினர். குழந்தைகளும் பெரியவர்களும் ரொம்பவே பாதிக்கப்பட்டனர். காற்றும் கூட அமைதி கொள்ளாமல் இதை தீவிரப்படுத்தியது. இந்த நிகழ்வை பார்த்து நான் ரொம்பவே மனம் நொறுங்கிப் போனேன். அதேசமயம் நாங்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
262 days ago
262 days ago