மேலும் செய்திகள்
பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது
246 days ago
‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன்
246 days ago
அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர்
246 days ago
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவி என்னும் பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். அங்குள்ள சக்தி விநாயகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சக்தி விநாயகர் கோயிலில் 20ம் ஆண்டு பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியா, ''தாராவியில் இவ்வளவு பேர் இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை, சொந்த ஊரில் இருப்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது. சக்தி விநாயகர் கோவில் 20ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்த அனைவருக்கும் நன்றி. நான் கேரளாவை அடிப்படையாக கொண்டதால் என் தமிழ் ரொம்ப சுத்தமா இருக்காது. ஆனாலும், என்னை வாழவைத்தது தமிழகம்தான்'' எனப் பேசினார்.
246 days ago
246 days ago
246 days ago