விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது
                                ADDED :  285 days ago     
                            
                            மகாராஜா படத்தை அடுத்து ட்ரெயின், ஏஸ் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. நேற்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ட்ரெயின் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. அதையடுத்து அவர் நடித்து வரும் இன்னொரு படமான ஏஸ் படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி போல்டு கண்ணன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை இயக்கிய ஆறுமுக குமார் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மற்றொரு முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.