மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
233 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
233 days ago
மலையாள திரையுலகில் பிரேமம் படம் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் சவ்பின் சாஹிர். தொடர்ந்து துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக துல்கர் சல்மானின் படங்களில் அதிகம் இவர் நடித்துள்ளார். அது மட்டுமல்ல அடிப்படையில் இவர் உதவி இயக்குனராக இருந்தவர்.
பின்னர் துல்கர் சல்மானை வைத்து கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பறவ என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சவ்பின் சாஹிர். அதன் பிறகு ஒரு குணச்சித்திர நடிகராக, கதையின் நாயகனாக பிஸியான இவர் கடந்த வருத்தம் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் நண்பர்கள் கூட்டத்தில் நண்பரை காப்பாற்றும் பிரதான நபராக நடித்து மொழி தாண்டி ரசிகர்களை வசீகரித்தார்.
அதன் பலனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. தற்போது கூலி படத்தில் நடித்து வரும் இவர் இதனைத் தொடர்ந்து, தான் மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப இருப்பதாகவும் கூலி படப்பிடிப்பு முடிவடைந்ததும் அதற்கான வேலைகளை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். தனது இரண்டாவது படத்திலும் துல்கர் சல்மான் தான் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதையும் இவர் உறுதி செய்துள்ளார்.
233 days ago
233 days ago