மேலும் செய்திகள்
'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு!
244 days ago
'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
244 days ago
கடந்த சில வருடங்களில் தமிழில் அதிக படங்களில் கதையின் நாயகியாக நடித்தவர் என்றால் அது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான். தமிழில் பிசியாக இருந்தாலும் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் இவரை தேடி அழைப்புகள் வர மாறி மாறி நடித்து வருகிறார். தெலுங்கில் 2019லேயே நுழைந்த இவர் மிஸ் மேட்ச், டக் ஜெகதீஷ், ரிபப்ளிக் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த சங்கராந்தி பண்டிகைக்கு வெளியான சங்கராந்தி வஸ்துனம் என்கிற படத்தில் நடிகர் வெங்கடேஷிற்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இன்னொரு கதாநாயகியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.
இந்த படம் வெளியான நாளிலிருந்து ஓரளவு நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் படத்தின் பாடல் ஒன்று ஒலிக்கப்பட அந்தப் பாடலுக்கு ஏற்ப தான் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தபடியே துள்ளலாக ஆட்டம் போட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். கூடவே அருகில் அமர்ந்திருந்த நாயகன் வெங்கடேஷையும் உற்சாகமாக வேடிக்கை செய்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
244 days ago
244 days ago