மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
257 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
257 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
257 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
257 days ago
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து கடந்த வாரம் வெளிவந்த தெலுங்குப் படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தமன் இசையமைத்த மற்றொரு படமான 'டாகு மகாராஜ்' படத்தின் சக்சஸ் மீட் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தமன், “இப்போது ஒரு தயாரிப்பாளர் அவருடைய படத்தின் வெற்றியைக் கூட தனதாக்கிக் கொள்ள முடியவில்லை. தெலுங்கு சினிமா தற்போது நல்ல நிலையில் ஜொலிக்கிறது. மற்ற மொழிகளிலிருந்து பலரும் இங்கு வந்து பணி புரிய வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், இங்கு நாமோ படங்களைக் கொன்று கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்களது ரசிக சண்டைகளை போட்டுக் கொள்ளுங்கள். ஆனால், அதே சமயம் நமது தயாரிப்பாளரைரையும், சினிமாவையும் நாம் பொறுப்புடன் மதிக்க வேண்டும். டிரோல்ஸ், நெகட்டிவ் டேக்ஸ், டிரென்ட்ஸ் ஆகியவற்றால் இப்போது எரிச்சல்தான் வருகிறது,” என்று பேசியிருந்தார்.
'கேம் சேஞ்ஜர்' படம் முதல் நாளிலேயே 186 கோடி வசூலைப் பெற்றது என்ற அறிவிப்பு தெலுங்கு ரசிகர்களிடம் பலமாகக் கிண்டலடிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஒரு வாரமாக அப்படத்தின் வசூல் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமனின் பேச்சுக்கு தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரும், ராம் சரணின் அப்பாவுமான சிரஞ்சீவி ஆதரவு அளித்து பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.
அதில், “நேற்று நீங்கள் பேசிய வார்த்தைகள் மனதைத் தொட்டன. எப்போதும் ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இப்படியொரு வலி இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், நீங்கள் எவ்வளவு வருத்தப்படுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்று தோன்றியது. படமாக இருந்தாலும் சரி, கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவர்களின் வார்த்தைகளின் தாக்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். வார்த்தைகள் ஊக்குவிக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நாம் நேர்மறையாக இருந்தால் அந்த ஆற்றல் நம் வாழ்க்கைகையை நேர்மறையாக வழி நடத்தும்,” என்று பதிவிட்டுள்ளார்.
257 days ago
257 days ago
257 days ago
257 days ago