மார்ச் மாதத்தை குறிவைக்கும் ஜீனி படக்குழு!
ADDED : 259 days ago
புதுமுக இயக்குனர் அர்ஜூனன் இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜீனி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25வது படமாக தயாராகி வருகிறது.
கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இறுதிகட்ட பணிகளில் உள்ளதால் இப்படத்தை 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.