உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தியேட்டர் ரன்னிங் டைமோடு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான விடுதலை-2!

தியேட்டர் ரன்னிங் டைமோடு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான விடுதலை-2!


விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் விடுதலை -2. வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்திற்கு பாசிட்டீவான விமர்சனங்கள் வெளியானபோதும் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை. இந்நிலையில் தியேட்டரில் வெளியான ரன்னிங் டைம்மில் இருந்து ஒரு மணி நேரம் கூடுதலாக, அதாவது 3 மணி நேரம் 45 நிமிடமாக விடுதலை-2 படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இன்று விடுதலை- 2 படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதோடு 3 மணி 45 நிமிடங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தியேட்டரில் வெளியானது போலவே அதே ரன்னிங் டைமில் ஓடிடி தளத்திலும் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !