அஜித்தின் விடாமுயற்சி படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
ADDED : 367 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛விடாமுயற்சி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், திடீரென்று பின் வாங்கியது. இந்நிலையில் தற்போது இந்த விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‛பத்திக்கிச்சு' என்று தொடங்கும் பாடலையும் வெளியிட்டுள்ளார்கள். அஜித் தோன்றும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.