மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
256 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
256 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
256 days ago
தீவிரமான காதல் படங்களில் இணைந்து நடிக்கும்போது காதல் வயப்பட்டு திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகள் நிறைய இருக்கிறார்கள். அஜித், சூர்யா மிகப்பெரிய உதாரணம். இந்த வரிசையில் அந்த காலத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் பி.யு.சின்னப்பா - ஏ.சகுந்தலா ஜோடி.
பிரபலமான வரலாற்று கதை பிருத்விராஜன், சகுந்தலை காதல். டெல்லி பேரரசர் ஜெய்சங்கரின் மகளான சகுந்தலையை சிறிய மன்னனான பிருத்விராஜ் குதிரையிலேயே அரண்மணைக்குள் புகுந்து சகுந்தலையை கடத்தி வந்து திருமணம் செய்து கொள்ள பின்னர் அது தொடர்பாக நடந்த யுத்தங்களும், இதை பயன்டுத்தி முகலாய படையெடுப்புகள் நடந்ததும் வரலாறு. இந்த கதையைத்தான் 'பிருத்விராஜன்' என்ற பெயரில் மைசூர் அரச குடும்பத்தை சேர்ந்த பி.சம்பத்குமார் இயக்கினார்.
பிருத்விராஜனாக பி.யு.சின்னப்பாவும், சகுந்தலையாக ஏ.சகுந்தலாவும் நடித்தனர். இந்த ஜோடியுடன் டி.எஸ்.பாலையா, டி.எம்.ராமசுவாமி பிள்ளை, எம்.ஆர்.சந்தானலட்சுமி, எஸ்.டி.சுப்பையா, ஜி.எம்.பஷீர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.கே.சம்பங்கி, டி.ஆர்.பி.ராவ், எஸ்.வேலுசாமி கவி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், பி.எஸ். ஞானம் மற்றும் கே.கே.கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
சென்ட்ரல் ஸ்டுடியோஸ் மற்றும் ஹரன் டாக்கீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஏ.நடராஜன், ஜி,ராமநாதன் இசை அமைத்தனர். அந்த காலத்தில் பாரதியார் பாடல்களுக்கு ஆங்கில அரசு தடை விதித்திருந்தால் அவர் பெயர் குறிப்பிடாமல் பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள். பாரத சமுதாயம் வாழ்கவே என்பது அதில் முக்கியமான பாடல். படபிடிப்பின்போது காதலித்து வந்த சின்னப்பாவும், சகுந்தலாவும் படம் வெளிவந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர்.
256 days ago
256 days ago
256 days ago