பிரேமலு 2ம் பாகம் அப்டேட்
ADDED : 256 days ago
கடந்த ஆண்டு மலையாளத்தில் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நஸ்லன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த படம் 'பிரேமலு' . இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை விட தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து பிரேமலு 2ம் பாகத்தை கடந்த ஆண்டில் அறிவித்தனர். ஆனால், அதன்பிறகு பல மாதங்கள் கடந்தும் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிரேமலு படத்தினை தயாரித்த பாவானா ஸ்டுடியோஸ் நிறுவனர் சமீபத்தில் அளித்த பேட்டியின் மூலம் அவர் கூறியதாவது, பிரேமலு 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பை இவ்வருட ஜூன் மாதத்தில் துவங்கி டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் . தற்போது இதற்கான லொக்கேஷன் மற்றும் நடிகர், நடிகை தேர்வு பணி நடைபெற்று வருகிறது என கூறினார்.