2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது!
ADDED : 300 days ago
கடந்த 2023ம் ஆண்டில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 'அனிமல்' என்ற ஹிந்தி படமும், 2024ல் புஷ்பா- 2 என்ற தெலுங்கு படமும் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. இந்த நிலையில், அவர் ஹிந்தியில் நடித்து வந்த 'சாவா' என்ற ஹிந்தி படம் வருகிற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகிறது. சத்ரபதி சிவாஜி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விக்கி கவுசல் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக யேசு பாய் என்ற வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா, இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.