முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி'
ADDED : 300 days ago
தமிழில் 'தாம்தூம், தலைவி, சந்திரமுகி - 2' போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவர் தற்போது ஹிந்தியில் 'எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 17ம் தேதி அன்று திரைக்கு வந்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கங்கனாவின் அழுத்தமான நடிப்பால் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அதோடு முதல் நாள் சுமாரான வசூலை கொடுத்த இந்த படம் அதன்பிறகு வேகம் பிடித்துள்ளது. இந்நிலையில் மூன்று நாட்களில் இந்த எமர்ஜென்சி படம் இந்திய அளவில் 12.26 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.