உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியல் நடிகரை திருமணம் முடித்த சினிமா நடிகை!

சீரியல் நடிகரை திருமணம் முடித்த சினிமா நடிகை!


சின்னத்திரை சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சந்தோஷ். தற்போது 'ரஞ்சனி' என்கிற தொடரில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இவரும் யூ-டியூப் வெப் சீரியஸ்களில் நடித்து வந்த மவுனிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். மவுனிகா இப்போது தான் 'லப்பர் பந்து' படத்தின் மூலம் அதிக புகழை பெற்றிருந்தார். இவர்கள் இருவரது நிச்சயதார்த்தமும் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது குருவாயூரில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானதையடுத்து சந்தோஷ் - மவுனிகா தம்பதியினருக்கு சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் திருமண வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !