உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் முதல்பார்வை வெளியானது

டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் முதல்பார்வை வெளியானது

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2. அதன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் தில்லுக்கு துட்டு 3வது பாகம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' எனும் பெயரில் வெளியானது. அதனை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கினார்.

இதைத்தொடர்ந்து பிரேம் ஆனந்த் , சந்தானம் கூட்டணியில் 'டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல்' படம் உருவாகிறது. இதனை நடிகர் ஆர்யா மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். கிட்டத்தட்ட இறுதிகட்ட படப்பிடிப்பு நெருங்கிய நிலையில் சந்தானம் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் கவுதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், மாறன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !